Wednesday, July 13, 2011

கவிஞர் வாசல் வசந்தப்பிரியன்

         உண்மை தருமே நன்மை 
                                                            ( கவிஞர் வாசல் வசந்தப்பிரியன் )
தவறுதலாய் விட்டுச்சென்றான் பயணி தன  கைபையை -அதை
தனதாக்கிக்கொள்ள நினைக்காது -ஆட்டோ ஓட்டுனர்
உண்மையை சொல்லி ஒப்படைத்தார் காவல்நிலையத்தில் !
நன்மையாய் அவர் பெற்றார் பரிசும் நற்சான்றிதழும்

நிரபராதி நன்மை பெற வேண்டும் என்பதற்க்காகத்தான்
சாட்சிக்கூண்டில் ஏறும் சகல மனிதர்களும் சொல்கின்றார்
"நன் சொல்வதெல்லாம் உண்மை ,உண்மைதவிர வேறில்லை !"
என்கிற சத்தியப்பிரமாணத்தை நீதிபதியின் முன்னிலையில் !

முயல் அன்று ஆமையிடம் தோற்றதென்னவோ உண்மைதான்
விளைவு ...?இன்றும் முயல் கூட்டமோ
பாய்ந்து பாய்ந்து செல்லும் சுறுசுறுப்பு நன்மையன்றோ !

பொட்டு வைத்துக்கொண்ட விரல் பொத்தானை அமுக்கியது உண்மைதான் !
நிறைவேறும் வாக்குறுதிகளை -விரல்விட்டு எண்ணிக்கொண்டிருப்பது நன்மைதான் !

அதிவேகமாய் ஓடிவந்து - பந்து வீசுவது -உண்மைதான் !
அதுவே 'நோ பால்' ஆகும் போது ஆட்டக்காரருக்கு அது நன்மைதான் !

கவிதை எழுதும்போது காகிதங்கள் கிழிபடுவது உண்மை !
கனியொத்த கவிதை உருவாகி இனித்திடுமே அது நன்மை !

மண்ணைக் கீறிக்கொண்டு விதை வெளிப்படுவது உண்மை !
விண்ணோக்கி அது விருட்ச்சமாய் வளர்வதுதான் நன்மை !

வீணையின் நரம்புகளில் விரல்களின் விளையாட்டு உண்மை !
விதம் விதமாய் அதில் நாதம் பிறக்கிறதே அது நன்மை !

மணவறையில் அமர்வதுவோ மறுக்கவொண்ணா உண்மை !
மனமொத்த தாம்பத்தியம் மறுக்கவொண்ண நன்மை !

ஓட்டையுடன் புல்லாங்குழல் உருவாவது உண்மை
பட்டை அது  இசைக்கையிலே உணர்த்திடலாம் நன்மை !

வாசலிலே படிக்கின்ற கவிதையாவும் உண்மை
வாசமிகு நறுமலராய் மனம் வீசும் நன்மை !

நாக்கிற்கு போடப்பட்ட பொன்னாடையே உண்மை
நாக்கு உதிர்க்கின்ற நற்சொல்லே நன்மை !

அடைகாக்கும் தேனீக்கள் கூட்டமே உண்மை -கூடு
உடைபட்டால் வழிகின்ற தேனன்றோ நன்மை !

சொல்லுக்கு உண்மையே கிரீடம் சூட்டும்
எல்லாமே நன்மையை எளிதில் கூட்டும் !

Friday, March 11, 2011

செல்வன் மிருதுன் மணிகண்ட பிரபு


 வாழும் வாழ்வே வரலாறு 

கல்வி நமக்கு கண்ணாகும் 
கற்பவை அனைத்தும் பொன்னாகும் 
கற்றவர் வழியில் நடந்தால் 
பெற்றவர் மனமே நலமாகும் : 

மண்ணில் தானே போன்னுமிருக்கு !
விண்ணை தொடும் ஆற்றல் நம்மிலிருக்கு! 
பொன்னும் பொருளும் பெருமை தரும் 
பொறுமை நமக்கு புகழை தரும் 

அன்னைக்கு உண்டு மன்னிக்கும் மனம் ,
தமிழ் சொல்லுக்கு உண்டு இனிக்கும் குணம் ,
தட்டி கேட்கின்ற  உரிமை வேண்டும் 
மூத்தோரை மதிக்கவும் வேண்டும்

தேடலிருந்தால் தெழிவு வரும் , 
திறமை இருந்தால் உலகே வரும் , 
இயக்கம் அனைத்தும் நாமானால் 
இனிக்கும் வாழ்வே நமக்காகும்! 

                        ஏன் ?

வங்க  கடல் வழிவிட்டு ஒதுங்கிவிடும் 
வனும் இறங்கி வந்து நம்மை வாழ்த்திவிடும்
நாம் வாழும் வாழ்வே வளமாகும் வரலாறு ஆகும் .

Saturday, February 5, 2011

குறள் எடு குரல் கொடு 

திரும்பத்  திரும்பப் பாராயணம்
உரைகள் விளக்கும் உபன்யாசம்
அர்த்தம் உணராமல் 
உள்ளம் விடுத்து 
உதடுகளில் நாமாவளி 

வேதங்களைப்  போல  
ஆகிப்போனது 
திருக்குறள் வெறும் முணுமுணுப்பாக 

சுவர்களில் , பேருந்துகளில் 
பாடப்புத்தகங்களில் 
அலுவலகங்களில் எங்கும் 
சாமி படம்போல
வள்ளுவனும் அவன் குறளும்

 பொருள் பற்றிச் சொன்னது 
நினைவிருக்க - அவன் 
அருள் பற்றிச்சொன்னது 
மறந்து போனது

அரசு, அமைச்சு ,துறவு என்று
அத்தனைக்கும் இலக்கணம் சொன்னான்
ஆனால் இன்று 
ஒன்றில் கூட உரியவருக்கு இடமில்லை

தமிழ் சாதிக்கான 
வேதமாகிப் போனது
குறள் - அதில் உரைசொல்லக் 
கற்றவன் பூசாரியாக
சடங்குகளோடு நின்றுபோனது 
அவன் உரைகள்

பூசாரியின் பிள்ளை பூசாரியாக
அதிகாரம் மொழியாலே 
நிறுவப்படுகிறது- நாம் 
யாரும் அறியாமலேயே

மொழியின் மீது
சிம்மாசனம் செய்தவன்
படிக்கட்டுகளிலா குறள் 
படிந்து கிடப்பது?

Sunday, January 23, 2011

அழைப்பிதழ்




Monday, January 3, 2011

ஒற்றை பனைமரநிழலில்
ஓராயிரம் கனவுகளுடன்
நித்தம் பசியாற
நீளும் கைகள்
விழியில் எதிர்பார்ப்புடன்
விடியலை தரவரும்
ரட்சகனுக்காய் காத்திருக்கும்

எத்தனையோ பத்தாண்டு
ஏமாற்றிப்  போனாலும்
இந்தப் பத்தாண்டு
இன்பத்தை தருமென்று
நம்பிக்கை நாற்றுக்களை நட்டுவைப்போம்

இலவசப் புயல் அடிக்காமல்
ஊழல் வெள்ளம் சிதைக்காமல்
பயிர் வளர வழிசெய்வோம்

பொழுதெல்லாம் நம் செல்வம்
அந்நியர்
கொள்ளைகொண்டு போகாமல்
கொள்கை செய்வோம்

நாளை வரும் காலம்
நமக்காக மலருமென்று
பூரிப்போம் புத்தாண்டில்

இளசை கிருஷ்ணமூர்த்தி

Sunday, January 2, 2011

வாசலுக்கு வருக


கவிதைகளின் வசந்த வாசல்
வசந்தப்ப்ரியனின் இதய வாசல்
வசந்தாவின் புன்னகை வாசல்
கவிஞர்களின் கற்பனைக்கு
கைவிரிக்கும் அரண்மனை வாசல்