Saturday, February 5, 2011

குறள் எடு குரல் கொடு 

திரும்பத்  திரும்பப் பாராயணம்
உரைகள் விளக்கும் உபன்யாசம்
அர்த்தம் உணராமல் 
உள்ளம் விடுத்து 
உதடுகளில் நாமாவளி 

வேதங்களைப்  போல  
ஆகிப்போனது 
திருக்குறள் வெறும் முணுமுணுப்பாக 

சுவர்களில் , பேருந்துகளில் 
பாடப்புத்தகங்களில் 
அலுவலகங்களில் எங்கும் 
சாமி படம்போல
வள்ளுவனும் அவன் குறளும்

 பொருள் பற்றிச் சொன்னது 
நினைவிருக்க - அவன் 
அருள் பற்றிச்சொன்னது 
மறந்து போனது

அரசு, அமைச்சு ,துறவு என்று
அத்தனைக்கும் இலக்கணம் சொன்னான்
ஆனால் இன்று 
ஒன்றில் கூட உரியவருக்கு இடமில்லை

தமிழ் சாதிக்கான 
வேதமாகிப் போனது
குறள் - அதில் உரைசொல்லக் 
கற்றவன் பூசாரியாக
சடங்குகளோடு நின்றுபோனது 
அவன் உரைகள்

பூசாரியின் பிள்ளை பூசாரியாக
அதிகாரம் மொழியாலே 
நிறுவப்படுகிறது- நாம் 
யாரும் அறியாமலேயே

மொழியின் மீது
சிம்மாசனம் செய்தவன்
படிக்கட்டுகளிலா குறள் 
படிந்து கிடப்பது?

0 comments:

Post a Comment